ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 9 செப்டம்பர் 2024 (15:28 IST)

இந்தியாவில் யாருக்கும் குரங்கம்மை தொற்று இல்லை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

இந்தியாவில் யாருக்கும் குரங்கம்மை நோய் பாதிப்பு இல்லை என்றும் அறிகுறி இருந்ததாக கூறப்பட்ட நபருக்கும் பரிசோதனையில் குரங்கம்மை பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை நோய் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மனித இனத்திற்கு இந்த நோய் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்த விழிப்புணர்வை உலக சுகாதார மையம் அனைத்து நாடுகளுக்கும் ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவிலும்  குரங்கம்மை   குறித்த எச்சரிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் வெளிநாட்டு பயணிகளிடம் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த ஒருவருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு இருப்பதாக நேற்று செய்தி வெளியான நிலையில் அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அந்த நபருக்கு பரிசோதனையில் குரங்கம்மை பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் எனவே இந்தியாவில் யாருக்கும் உறங்காமல் பாதிப்பு இல்லை என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Edited by Siva