செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 30 மார்ச் 2020 (09:33 IST)

ஊரடங்கை நீட்டிக்கும் எண்ணம் இல்லை – மத்திய அரசு திட்டவட்டம் !

ஏப்ரல் 14க்குப் பிறகு ஊரடங்கை நீட்டிக்கும் எண்ணம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் வைரஸ் பரவலைத் தடுக்கும் நிறுத்தும் விதமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அறிவித்துள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு அமல் ஏப்ரல் 14 ஆம் தேதியோடு முடிவடைகிறது. ஆனால் மத்திய அரசு மேலும் இந்த ஊரடங்கை நீட்டிக்கும் என செய்திகள் பரவின. இதையடுத்து இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக மத்திய அரசு ‘ஊரடங்கை மேலும் நீட்டிக்கும் எண்ணம் தற்போது வரை இல்லை’ என விளக்கமளித்துள்ளது.