Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மீண்டும் பீகார் முதல்வரானார் நிதிஷ்குமார்: பாஜக தலைவர் சுஷில் மோடி துணை முதல்வர்!

மீண்டும் பீகார் முதல்வரானார் நிதிஷ்குமார்: பாஜக தலைவர் சுஷில் மோடி துணை முதல்வர்!

வியாழன், 27 ஜூலை 2017 (10:23 IST)

Widgets Magazine

பீகார் மாநிலத்தின் முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்த நிதிஷ்குமார். இன்று ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.


 
 
கடந்த சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார், லாலு பிரசாத் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த நிலையில் நேற்று திடீரென பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
 
லாலுபிரசாத் யாதவின் மகனும் துணை முதல்வருமான தேஜஸ்வி மீது ஊழல் புகார் வந்து சிபியை சேதனை நடந்ததையடுத்து பதவி விலக வேண்டும் என்று நிதிஷ்குமார் வலியுறுத்த அதற்கு லாலுபிரசாத் சம்மதிக்காததால் தனது பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது.
 
243 சட்டசபை தொகுதிகள் கொண்ட பீகாரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 58 உறுப்பினர்களை கொண்டுள்ளது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளத்திற்கு 71 உறுப்பினர்களும், லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளத்திற்கு 80 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 27 உறுப்பினர்களும் உள்ளனர்.
 
இந்நிலையில் ஆட்சியமைக்க 122 எம்எல்ஏக்கள் பலம் போதும் என்ற நிலையில் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பாஜக பச்சைக்கொடி காட்டியது. இதன் மூலம் நிதிஷ்குமார் கட்சியின் 71 உறுப்பினர்கள் மற்றும் பாஜகவின் 58 உறுப்பினர்கள் என மொத்தம் 129 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது.
 
இதனையடுத்து இன்று பாட்னாவில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் கேசரிநாத் திரிபாதி மீண்டும் நிதிஷ்குமாருக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் அம்மாநில பாஜக தலைவர் சுஷில் மோடி துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அமைச்சரவையிலும் பாஜகவுக்கு இடம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு நாட்களில் பெரும்பாண்மையை நிரூபிக்க ஆளுநர் நிதிஷ்குமாருக்கு உத்தரவிட்டுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

தமிழக அமைச்சரவை மாற்றம்?: ஓபிஎஸ் துணை முதல்வர்?

தமிழக அமைச்சரவை மாற்றம் இன்னும் சில நாட்களில் இருக்கும் எனவும் அப்போது அதிமுகவின் எல்லா ...

news

ஆட்சி அமைக்க உரிமை கோரும் லாலு மகன் தேஜஸ்வி

பீகாரில் நேற்று முதலமைச்சர் நிதிஷ்குமார் ராஜினாமா செய்ததை அடுத்து பாஜக எம்.எல்.ஏக்கள் ...

news

பாதுகாப்பு அமைச்சர் ஆகிறார் அமித்ஷா: சீனா பயமுறுத்தல் காரணமா?

இந்திய எல்லையில் சீனா அடிக்கடி வாலாட்டி கொண்டே வருவதால் பாதுகாப்பு துறை அமைச்சராக அமித்ஷா ...

news

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு அனுமதி இல்லை: டிரம்பின் அடுத்த அதிரடி

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனாட் டிரம்ப் அவ்வப்போது சர்ச்சைக்குரிய ...

Widgets Magazine Widgets Magazine