பெங்களூரை விட்டு வெளியேறு: தடவியல் நிபுணர்களால் தடவல் மன்னன் நித்யானாந்தாவுக்கு சிக்கல்

Last Modified சனி, 25 நவம்பர் 2017 (00:40 IST)

சர்ச்சைக்குரிய வீடியோவில் இருப்பது நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் தான், அதில் டூப்ளிகேட் எதுவும் இல்லை என்று சமீபத்தில் டெல்லி தடயவியல் ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையால் நித்யானந்தா வழக்கு மீண்டும் உயிர்ப்பெற்றுள்ளது.

டெல்லி தடயவியல் ஆய்வு மையத்தின் ஆய்வறிக்கை தற்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை காரசாரமாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று நித்தியானந்தாவின் பெங்களூர் ஆசிரமம் முன் குவிந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், 'நித்தியானந்தாவே பெங்களூரை விட்டு வெளியேறு' என்று கோஷமிட்டனர்,. மேலும் ஒருசிலர் ஆசிரமத்திற்குள் அத்துமீறி நுழைய முயற்சித்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தடவியல் நிபுணர்களால் தடவல் மன்னனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :