செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : சனி, 7 நவம்பர் 2020 (19:50 IST)

பீகாரில் முடிவுக்கு வருகிறது நிதிஷ்குமார் ஆட்சி: கருத்துக்கணிப்பில் தகவல்!

பீகாரில் முடிவுக்கு வருகிறது நிதிஷ்குமார் ஆட்சி:
பீகார் மாநிலத்தில் மூன்றாவது மற்றும் கடைசி கட்ட தேர்தல் இன்று முடிவடைந்துள்ள நிலையில் வரும் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான கருத்துக்கணிப்பு குறித்து தற்போது பார்ப்போம்
 
இந்தியா டுடே கருத்துக்கணிப்பின்படி பீகாரின் அடுத்த முதல்வர் ஆர்ஜேடி தலைவரும், லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் தான் என தெரிவித்துள்ளது 
 
பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு 35 சதவீத ஆதரவு கிடைத்துள்ளதாகவும், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு 44 சதவீத ஆதரவு கிடைத்துள்ளதாகவும், ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானுக்கு 7 சதவீத ஆதரவு அவருக்குக் கிடைத்துள்ளதாகவும் குறிப்ப்பிடப்பட்டுள்ளது. மேலும் உபேந்திர குஷ்வாஹாவுக்கு 4 சதவீத ஆதரவும், பாஜக தலைவரும், துணை முதல்வருமான சுஷில் குமார் மோடிக்கு 3 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது. 
 
இந்த கருத்துக்கணிப்பின் மூலம் பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு செல்வாக்கு சரிந்திருப்பதும், லாலு கட்சிக்கு செலவாக்கு அதிகரித்திருப்பதும் தெரிய வருகிறது. அதேபோல பாஜகவின் செல்வாக்கும் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.