திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த நிர்மலா சீதாராமன்: வைரல் புகைப்படம்!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று இரவு திருப்பதி வருகை தந்ததோடு இன்று காலை விஐபி தரிசனம் மூலமாக ஏழுமலையானை தரிசனம் செய்தார்
அவருக்கு தீர்த்தம், லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது என்றும் சுவாமி தரிசனம் முடிந்த பின்னர் அங்கு அருகில் நின்றிருந்த பக்தர்களுடன் அவர் உரையாடினார் என்றும் அவர் தனக்கு வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தை ஒரு சிறுவருக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
முன்னதாக திருப்பதி வந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை தேவஸ்தான அறங்காவலர் குழு வரவேற்பு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva