திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 20 மார்ச் 2020 (09:44 IST)

நிர்பயா குற்றவாளிகள் உடல்களை வாங்க வராத உறவினர்கள்: பரபரப்பு தகவல்

நிர்பயா குற்றவாளிகள் உடல்களை வாங்க வராத உறவினர்கள்
டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவை கொலை செய்த குற்றவாளிகள் நால்வர் இன்று அதிகாலை திட்டமிட்டபடி அறிந்து 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர் என்ற தகவலை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் நிர்பயா குற்றவாளிகள் மரணமடைந்தது உறுதி செய்த பின்னர் பிரேத பரிசோதனைக்காக திஹார் சிறை அருகிலுள்ள டிடியு மருத்துவமனைக்கு ஆன்புலன்சில் ஏற்றி செல்லப்பட்டது 
 
டிடியு மருத்துவமனையில் உள்ள உடற்கூறு நிபுணர் மருத்துவர் பிஎன் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட குழு 4 குற்றவாளிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இந்த நிலையில் குற்றவாளிகளின் உடலை வாங்க உறவினர்கள் யாரும் வரவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது. இருப்பினும் உடல் பரிசோதனை முடிந்த பின்னர் மருத்துவமனைக்கு உறவினர்கள் உடலை வாங்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு உடல்களை யாரும் வாங்க வரவில்லை என்றால் சிறை நிர்வாகம் தரப்பில் இறுதிச்சடங்கு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது