இந்தியாவின் 13 நகரங்களில் 5ஜி சேவை: அடுத்த ஆண்டு தொடக்கம்!
இந்தியாவில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் தற்போது 4ஜி சேவை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த ஆண்டு முதல் 5ஜி சேவை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
சென்னை உள்பட 13 நகரங்களில் முதல் கட்டமாக 5ஜி சேவை தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும் அதன் பின்னர் நாடு முழுவதும் 5ஜி சேவையை விரிவு படுத்தப்பட உள்ளதாகவும் தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது
5ஜி சேவை குறித்து ஐஐடி மூலம் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் இதற்கு 244 கோடி ஒதுக்கி இருந்ததாகவும் மத்திய அரசு ஏற்கனவே கூறியிருந்த நிலையில் இந்த ஆய்வு டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை அனைத்து 2022 ஆம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் முதல் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் 5ஜி சேவை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது
5ஜி சேவை தொடங்க இருக்கும் நகரங்கள் பின்வருவன: சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு, லக்னோ, ஐதராபாத், புனே, காந்திநகர், ஜாம்நகர், சண்டிகர், குருகிராம்