இந்தியாவில் புதிய வகை உருமாறிய ஒமிக்ரான் : அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் புதிய வகை உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளதாக சர்வதேச ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததென்பதும் அதனை அடுத்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ்களும் பரவியது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இந்தியா கிட்டத்தட்ட மீண்டுவிட்ட நிலையில் மீண்டும் திடீரென புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பதாக சர்வதேச ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்தியாவில் எக்ஸ்பிபி என்ற புதிய வகை உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும் எனவே இந்திய சுகாதாரத் துறை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது
குறிப்பாக டெல்லி மேற்கு வங்காளம் ஒரிசா மகாராஷ்டிரா உள்ளிட்ட 9 மாநிலங்களில் இந்த புதிய வகை ஒமிக்ரான் வைரசால் 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva