செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (10:01 IST)

இந்தியாவில் எதிர்ப்பு சக்திக்கு தப்பிக்கும் பிறழ்வு கொண்டு புது வகை கொரோனா??

கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் புதிய கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 3,32,730 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,62,63,695 ஆக உயர்ந்துள்ளது.
 
ஒரே நாளில் 2,263 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,86,920 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,36,48,159 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 24,28,616 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இதனிடையே இந்தியாவில் புதிய கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ், அதிக தொற்றை ஏற்படுத்துவதுடன், நோய் எதிர்ப்பு சக்திக்கு தப்பிக்கும் பிறழ்வை கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த புதிய வைரஸ், ‘பி.1.618’ என அழைக்கப்படுகிறது. இது இரட்டை பிறழ்வு வைரஸ் என அறியப்படுகிற ‘பி.1.617’ வைரசில் இருந்து மாறுபட்டதாகும் என விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.