1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 டிசம்பர் 2021 (13:40 IST)

மது அருந்துவதற்கான வயது குறைப்பு: அதிரடி அறிவிப்பு!

ஒரு பக்கம் திருமண வயது 18 லிருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்ட நிலையில் இன்னொரு பக்கம் மது அருந்துவதற்கான வயதை குறைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
ஹரியானா மாநிலத்தில் மது அருந்துவதற்கான வயதுவரம்பு 25 என இருந்த நிலையில் தற்போது அது 21 ஆக குறைக்கப்பட்டதாக அறிவிக்க ஹரியானா மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
 
மது அருந்துவோருக்கு வயது வரம்பை 25ல் இருந்து 21 ஆக குறித்து கலால்துறை திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த மசோதா தற்போது நிறைவேற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மது அருந்துவதற்கான வயதுவரம்பு ஏற்கனவே பல மாநிலங்களில் 21 என்று இருக்கும் நிலையில் தற்போது அரியானா மாநிலத்தில் 21 வயதாக மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது