ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : வியாழன், 11 மே 2017 (16:16 IST)

மொட்டை மாடியில் தூங்கிய சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற காமுகன்!

மொட்டை மாடியில் தூங்கிய சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற காமுகன்!

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 9 வயது சிறுமியை அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 45 வயது கொத்தனார் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
நொய்டாவின் சுராஜ்பூர் பகுதியில் சுட்டன் பிரஜாபதி என்ற 45 வயது மதிக்கத்தக்க கொத்தனார் ஒருவர் வசித்து வருகிறார். அந்த குடியிருப்பில் உள்ள மற்றொரு வீட்டில் ஒரு தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளைகள் உள்ளன.
 
இந்நிலையில் நேற்று இரவு பிள்ளைகளின் பெற்றோர்கள் வீட்டில் அறையிலும், பிள்ளைகள் இருவரும் மொட்டை மாடியிலும் தூங்கிக்கொண்டிருந்தனர். இதனை கவனித்த அந்த கொத்தனார் இரவு 11 மணியளவில் குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்த மொட்டை மாடி பகுதிக்கு சென்றுள்ளார்.
 
அப்போது அங்கு தூங்கிக்கொண்டிருந்த 9 வயது சிறுமியை அந்த நபர் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி கதறி அழுதுள்ளது. சத்தம் கேட்டு பதறியடித்து பெற்றோர் மாடிக்கு வந்து பார்த்த போது அந்த கொத்தனார் தப்பித்து ஓடியுள்ளார்.
 
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அருகில் உள்ள காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் கொத்தனார் பிரஜாபதி மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.