1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 2 ஜூன் 2018 (07:37 IST)

நீட் தேர்வினை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்சநீதிமன்றம்

நீட் தேர்வினை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என  உச்சநீதிமன்றம் பதிலளித்துள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள், பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் போது, அதில் பல பிழைகள் ஏற்படுகிறது. கேள்வித்தாளில் பல்வேறு பிழைகள் இருப்பதால், மாணவர்களால் ஒழுங்காக தேர்வெழுத முடிவதில்லை. கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் விதத்தில் கேள்வித்தாள்களில் பல்வேறு பிழைகள் உள்ளது.

ஆகவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் மாணவர்களின் நலனைக் கருதி இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் தன்னார்வ தொண்டு அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 
 
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இவ்வழக்கை அவசர விசாரிக்க முடியாது என்று பதிலளித்துள்ளது.