வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 10 ஜூலை 2014 (16:42 IST)

பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய திட்டங்கள்

2014-2015 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு பல முக்கிய திட்டங்கள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு தனி தொலைக்காட்சி சேனல் இந்த ஆண்டில் துவக்கப்படும்.

விவசாயிகளுக்கான வட்டி மானியத் திட்டம் தொடரும்.

தேசிய அளவில் வேளாண் சந்தைகள் விரிவுபடுத்தப்படும்.

நிலங்களுக்கு ஏற்ற பயிர்களைதேர்வு செய்ய மண் வள அட்டை வழங்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.

5 லட்சம் நிலம் இல்லா விவசாயிகளுக்கு நபார்ட் வங்கி மூலமாக மத்திய அரசு நிதியுதவி.

வேளாண் துறையில் நபார்ட் வங்கி மூலமாக நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.5,000 கோடி ஒதுக்கீடு.

பாசன வசதிகளை மேம்படுத்த 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துளர்.