வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 25 ஜூலை 2014 (12:20 IST)

நளினி வழக்கு: மத்திய உள்துறை செயலாளர் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி விடுதலை தொடர்பான வழக்கில் மத்திய உள்துறை செயலாளர் பதிலளிக்கக் கோரி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூருக்கு பிரச்சாரம் செய்ய வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன் உட்பட பலர் மீது குற்றம்சாற்றப்பட்டு நளினிக்கு முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பின்பு ஆயுள் தண்டனையாக அது மாற்றப்பட்டது.
 
இந்நிலையில் சமீபத்தில் ஆயுள் தண்டனை கைதிகள் நீண்ட காலம் சிறையில் இருப்பதாலும், வழக்கு தாமதம் ஏற்பட்டதாலும் அவர்களை அரசு விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒரு வழக்கில் தீர்ப்பு கூறினார்கள்.
 
இதனடிப்படையில் நளினி உட்பட பலபேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
 
இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில் நளினி ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில் குற்றவாளியை விடுவிக்க மத்திய அரசிடம் கருத்து கேட்கும்படி 435 (1ஏ) சட்டப்பிரிவு கூறுகிறது என்று கூறியிருந்தார். 435 (1ஏ) சட்டப்பிரிவை நீக்க வேண்டும். சி.பி.ஐ. வழக்குகளில் குற்றவாளிகளை விடுவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது.
 
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், மத்திய உள்துறை செயலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.