1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 20 பிப்ரவரி 2017 (07:19 IST)

சொகுசு விடுதி, எம்.எல்.ஏக்கள் அதிருப்தி. முதல்வர் ராஜினாமா. இங்கல்ல நாகலாந்தில்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. முதல்வர் ஓபிஎஸ் ராஜினாமா, சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டது, புதிய முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கை வாக்கெடுப்பு ஆகிய பரபரப்புகள் தற்போது அடங்கிவிட்ட நிலையில் இதேபோல் நாகலாந்து மாநிலத்திலும், முதல்வர் மீது எம்.எல்.ஏக்கள் அதிருதி அடைந்துள்ளதால் அம்மாநில முதல்வர் டி.ஆர்.ஜெலியாங், ராஜினாமா செய்துள்ளார்.




நாகலாந்து முதல்வர் சமீபத்தில் பெண்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் 33 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்த உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவுக்கு அவரது கட்சியை சேர்ந்தவர்களே எதிர்ப்பு தெரிவித்து 49 பேர் தனி அணியாக முன்னாள் முதல்வர் நியூபி ரியோ தலைமையில் ஒருங்கிணைத்து சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் தனது சொந்த கட்சியின் எம்.எல்.ஏக்களே தனக்கு எதிராக திரும்பியதை அடுத்து நாகலாந்து முதலவர் டி.ஆர்.ஜெலியாங், ஞாயிற்றுக்கிழமை திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார். அடுத்த முதல்வர் யார் என்பதில் எம்.எல்.ஏக்களிடையே குதிரைபேரம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.