1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 7 ஏப்ரல் 2021 (08:23 IST)

புதிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அறிவித்தார் குடியரசுத்தலைவர்!

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக என் வி ரமணா குடியரசுத்தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி போப்டேவின் பதவிக்காலம் விரைவில் முடிய இருப்பதால் அவருக்கடுத்த இடத்தில் இருக்கும் மூத்த நீதிபதி என்.வி.ரமணா அவர்கள் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது. தற்போதைய நீதிபதி போப்டேவும் அவரது பெயரை பரிந்துரை செய்தார்.

இந்நிலையில் குடியரசுத்தலைவர் என் வி ரமணாவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்துள்ளார். அவர் ஆகஸ்ட் 2022 வரை பதவியில் இருப்பார்.