ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 23 மார்ச் 2024 (14:38 IST)

எனது கணவரை நீண்ட நாட்கள் காவலில் வைக்க முடியாது-சுனிதா கெஜ்ரிவால்

arvind kejriwal
விரைவில் வெளியே வந்து வாக்குறுதிகளை  நிறைவேற்றுவேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
 
மதுபான கொள்கையில் மூளையாக செயல்பட்டதாகவும், கொளை மாற்றி அமைக்கப்பட்டு வெளியிடுவதற்காக கோடிக்கணக்கில் பணம் பெற்றதாகவும், அப்பணத்தில்தான் கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்தபப்ட்டது என நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றம்சாட்டிருந்தது.
 
இவ்வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த்  கெஜ்ரிவால் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 
 
அவருக்கு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராக மறுத்த நிலையில், ''நேரில் ஆஜராகாத தன்னை ED கைது செய்யக்கூடாது என  உத்தரவிடக்கோரி'' டெல்லி ஐகோர்டில் மனுதாக்கல் செய்தார்.
 
ஆனால், டெல்லி ஐகோர்ட் அந்த உத்தரவிட மறுத்துவிட்டது. இதனைத்தொடர்ந்து இன்று மதியம் அவர் டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
 
ED அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்துவந்தபோது கைது செய்து அவரிடம் கைது பற்றி செய்தியாளர்கள்  கேள்வி எழுப்பினர்.
 
அதற்கு அவர்,  ''நான் உள்ளே இருந்தாலும் சரி வெளியே இருந்தாலும் சரி என் வாழ்க்கை நாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது. சிறையில் இருந்தாலும் நாட்டிற்கு சேவை செய்வேன் என்று தெரிவித்தார்.
 
இந்த நிலையில், விரைவில் வெளியே வந்து வாக்குறுதிகளை  நிறைவேற்றுவேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
 
அரவிந்த் கெஜ்ரிவால் கருத்தை அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
sunita kejriwal
அதில், சிறையில் இருந்து விரைவில் வெளியே வந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்.
எந்த ஒரு சிறையும் என்னை உள்ளே வைத்திருக்க முடியாது என்று அமலாக்கத்துறை காவலில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாக அவரது மனைவி வீடியோ வெளியிட்டுள்ளார்.

மேலும், நம் முன்னே பெரிய சக்தி ஒன்று இருக்கிறது. அதை   நாம் அனைவரும் ஒன்றிணைந்து வீழ்த்த வேண்டும் என கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்.இவர்களால் எனது கணவரை   நீண்ட நாட்கள் காவலில் வைக்க முடியாது. டெல்லி மக்கள் அனைவரும் எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். என்னுடைய கைது நடவடிக்கையால் பாஜக தொண்டர்களிடம் விரோதம் செய்துகொள்ள வேண்டாம்...பாஜக தொண்டர்களும் நமது சகோதர சகோதரர்கள்தான் '' என கூறியதாக   தெவித்துள்ளார்.
 
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து , ஆம் ஆத்மி கட்சியினர் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து, வரும் 25-ம் தேதி பிரதமர் இல்லத்தை முற்றுகையிட போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.