வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: திங்கள், 21 செப்டம்பர் 2015 (09:15 IST)

பெண்கள் ஜீன்ஸ் பேண்ட், செல்போன் பயன்படுத்த தடை: இஸ்லாமிய கிராம சபை அதிரடி உத்தரவு

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு இஸ்லாமிய கிராம சபை  பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் செல்போன் பயன்படுத்த தடை விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 


 


முஷாபர்நகர் மற்றும் ஷகரன்புர் மாவட்டத்தில் உள்ள பத்து கிராமங்களில் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

"இஸ்லாமிய பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் அணிவது எங்களது மதக் கொள்கைக்கு எதிரானது. ஜீன்ஸ் பேண்ட் அணிவதை நகரங்களில் வேண்டுமானாலும் அனுமதிக்கப்படலாம். ஆனால் எங்கள் கிராம பெண்கள் ஜீன்ஸ் அணிவதை அனுமதிக்க முடியாது" என்று இஸ்லாமிய கிராம சபையின் தலைவர் முகமது இர்பான் தெரிவித்துள்ளார்.

எங்களது கிராமத்தில் வாழும் திருமணமாகாத இளம் பெண்கள் செல்போனை பயன்படுத்துவது நல்லதல்ல என்று எண்ணுகிறோம். அவ்வாறு அவர்கள் மற்ற ஆண்களுடன் செல்போனில் பேசினால் அவை ஆபத்தில் தான் முடிவடையும். எனவே திருமணமாகாத இளம்பெண்கள் செல்போனையும் பயன்படுத்த தடைவிதித்திருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த நாடே நவீனமயமாகி வரும் நிலையில் இளம்பெண்கள் ஜீன்ஸ் மற்றும் செல்போன் பயன்படுத்த உத்தரப்பிரதேசத்தில் தடை விதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.