மும்பை கொரோனா நிலவரம்: ஒரே நாளில் சுமார் 10 ஆயிரம் பேர் பாதிப்பு, 58 பேர் பலி!
மும்பையில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு10,000ஐ நெருங்கிவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரே நாளில் மும்பையில் 9989 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து மும்பை நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 520,214 என்றும் இதுவரை குணமாகி டிஸ்சார்ஜ் செய்தவர்களின் எண்ணிக்கை 414,641 என்றும் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 92,464 என்றும் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 12,017 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் குணமாகி 8554 பேர் டிஸ்சார்ஜ் அந்ய்யப்பட்டு உள்ளனர் என்பதும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 58 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது