திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 19 ஜூலை 2017 (19:34 IST)

இலவச வைஃபை மூலம் ஆபாச படம் பார்ப்பதில் முதலிடம் பிடித்த மும்பை வாசிகள்

இலவசமாக வழங்கப்படும் இண்டர்நெட் வசதியை பயன்படுத்தி ஆபாச படம் பார்ப்பதில் மும்பை வாசிகள் முதலிடம் பிடித்துள்ளனர்.
 


 

மத்திய, மாநில அரசுகள் அலுவலங்கள், வங்கிகள் மற்றும் ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு பொதுமக்களின் இலவசமாக இணையதள சேவை வழங்கப்படுகிறது. மும்பை பகுதியில் மட்டும் 585 இடங்களில் இலவச வைஃபை வசதி வழங்கப்பட்டுள்ளது. இலவச வைஃபை வசதிகள் வழங்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து எந்தெந்த இணையதளங்களுக்கு பயனாளிகள் செல்கின்றனர் என்பதை ஆய்வு செய்துள்ளனர்.
 
அதில் மும்பை வாசிகள் சுமார் 30 ஆயிரம் பேர் வரை தினந்தோறும் இலவச இணையதளம் மூலம் ஆபாச படங்கள் பார்த்து வருவது தெரியவந்துள்ளது. இதேபோல் நாடு முழுவதும் 33 சதவீதம் பேர் இலவச வைஃபை சேவையை பயன்படுத்தி ஆபாசப் படங்களை பார்ப்பது தெரியவந்துள்ளது.