செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 15 அக்டோபர் 2021 (09:11 IST)

வாழ்க்கையே ஒரு ஸ்குவிட் கேம்தான்.. ஜாக்கிரதை! – வெப்சிரிஸை வைத்து எச்சரித்த போலீஸ்!

நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ள ஸ்குவிட் கேம் வெப்சிரிஸை வைத்து மும்பை போலீஸார் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு பதிவை இட்டுள்ளது வைரலாகியுள்ளது.

நெட்ப்ளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இணைய தொடர் ஸ்குவிட் கேம். இந்த தொடரின் ஒரு காட்சியில் பொம்மை ஒன்றுடன் க்ரீன் லைட், ரெட் லைட் என்ற விளையாட்டை விளையாடுவார்கள். அதில் ரெட் லைட் என கூறி பொம்மை திரும்பும்போது யாராவது அசைந்தால் அந்த பொம்மை சுட்டுக் கொன்று விடும்.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள மும்பை போலீஸார் “சாலையில் நடக்கும் விளையாட்டில் நீங்கள்தான் ப்ளேயர். எனவே எலிமினேட்ட் ஆகிவிடாமல் விதிகளை பின்பற்றுங்கள்” எனத் தெரிவித்துள்ளனர்.