திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 5 மார்ச் 2023 (12:33 IST)

ப்ளூ டிக் ஐடியா என்னோடது! எலான் மஸ்க் மீது இந்தியர் வழக்கு!

ட்விட்டரில் மூன்று விதமான டிக்குகள் வழங்கும் தனது ஐடியாவை எலான் மஸ்க் காப்பி அடித்து விட்டதாக இந்தியர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சர்ச்சைக்கும், ட்ரெண்டிங்க்கும் பெயர் போன உலக தொழிலதிபர் எலான் மஸ்க். டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களை நிர்வகித்து வரும் எலான் மஸ்க் சமீபத்தில் உலகம் முழுவதும் பலரால் பயன்படுத்தப்படும் ட்விட்டர் சமூக வலைதளத்தை வாங்கினார். அதுமுதலே தொடர் சர்ச்சைகளால் ட்ரெண்டாகி வருகிறார். ட்விட்டர் நிறுவனத்திலிருந்து பலரை பணிநீக்கம் செய்த அவர் மீத பணியாளர்களுக்கு டாய்லெட் பேப்பர் கூட அவர்களே கொண்டு வர வேண்டும் என சிக்கன நடவடிக்கைகளை அறிவித்தார். மேலும் ட்விட்டரில் ப்ளூ டிக் பெற கட்டணம் செலுத்தும் முறையையும் அறிவித்தார்.

இதற்கு பலர் எதிர்ப்புகள் தெரிவித்து வந்த நிலையில் பலர் பிரபலமாக இல்லாவிட்டாலும் விதம் விதமான பெயர்களில் ப்ளூடிக் பெற்றனர். எலான் மஸ்க் பெயரிலேயே கூட பலர் ப்ளூடிக் பெற்றனர். இதனால் வெரிபைட் டிக் வழங்கும் முறையை ப்ளூ, க்ரே, கோல்ட் ஆகிய மூன்று வண்ணங்களில் வழங்கும் முறையை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தினார், அந்த முறையே தற்போது தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த 3 டிக் முறையே தான் சொன்ன யோசனைதான் என மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் எலான் மஸ்க் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்த ரூபேஷ் என்பவர் தனது இந்த ஐடியாவை ட்விட்டரில் பதிவிட்டு எலான் மஸ்க்கை டேக் செய்திருந்ததாகவும், ஆனால் இதை நடைமுறைப்படுத்திய எலான் மஸ்க் தனது பெயரை குறிப்பிடவில்லை என்றும் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளார்.

Edit by Prasanth.K