புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 10 ஏப்ரல் 2021 (08:24 IST)

மும்பையில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு - மூடப்பட்ட 71 தடுப்பூசி மையங்கள் !

கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மும்பையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 
 
இந்நிலியில், மும்பையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் திங்கட்கிழமை வரை அரசு சுகாதார மருத்துவனைகளின் கீழ் இயங்கும் 71 தடுப்பூசி மையங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.