முகேஷ் அம்பானியின் ஆடம்பர வீட்டில் திடீர் தீவிபத்து: என்ன நடந்தது?


sivalingam| Last Modified திங்கள், 10 ஜூலை 2017 (22:48 IST)
உலகிலேயே அதிக மதிப்பு கொண்ட தனிநபர் பங்களாவான முகேஷ் அம்பானிக்கு சொந்தமான மும்பையில் உள்ள அண்டில்லா என்ற பங்களாவில் இன்று திடீரென தீவிபத்து நடந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 
 
மும்பை அல்டாமவுன்ட் சாலையில் அமைந்துள்ள இந்த பங்களாவில் சற்று முன் ஏற்பட்ட தீயை அணைக்க 6 தீயணைப்பு வாகனங்கள் ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்து எந்த வித உய்ரிச்சேதமும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
 
3 ஹெலிகாப்டர் தளம், 168 கார் பார்க்கிங், ஸ்நோ ரூம் என பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த பங்களா சுமார் 40 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. 27 அடுக்குகளே இருந்தாலும் சில மாடிகள் மிக உயரமாகக் கட்டப்பட்டுள்ளன. அதனால், இந்த பங்களா கிட்டத்தட்ட 40 மாடிக் கட்டடத்துக்கு இணையான உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :