திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 4 மார்ச் 2023 (17:02 IST)

50,000 பேருக்கு வேலைவாய்ப்பு: ரிலையன்ஸ் நிறுவனர் அம்பானி உறுதி..!

mukesh ambani
ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் ஆந்திராவில் மட்டும் 50 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கப் போவதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ஆந்திராவில் இன்று நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி கலந்து கொண்டார். இந்த நிலையில் அவர் இந்த நிகழ்சியில் பேசிய போது ஆந்திராவில் ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் ஐம்பதாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்
 
மேலும் 20 செக்டர்களுக்கு 340 முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.13 லட்சம் கோடி வரை ஆந்திராவில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்த போது சுமார் ஆறு லட்சம் பேர்களுக்கு ஆந்திராவில் இந்த முதலீடு காரணமாக வேலை கிடைக்கும் என்று தெரிவித்தார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran