1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bala
Last Modified: வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (17:48 IST)

ஆந்திராவில் பரபரப்பு: ஊசி மூலம் பெண்களின் பின்புறத்தை தாக்கும் சைக்கோ

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பச்சை துணியால் தன் முகத்தை மறைத்து வந்த வாகன ஓட்டி ஒருவர், ஊசி மூலம் தாக்கிவிட்டு செல்வதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பச்சை துணியால் தன் முகத்தை மறைத்தபடி இருசக்கர வாகனத்தில் ஒருவர் வருகிறாராம். அவர் தனியாக வரும் பெண்களை தன் கையில் வைத்திருக்கும் ஊசியால் பின்புறம் குத்திவிட்டு வேகமாக பறந்துவிடுகிறாராம். ஆறு கிராமங்களில் சுற்றி வந்த அந்த மர்ம மனிதர்  ஊசியுடன் சுற்றி வந்ததாக அங்குள்ள பெண்கள்  பார்த்துள்ளனர். கடந்த நான்கு நாட்களில் 12 க்கும்  மேற்பட்ட பெண்கள் ஊசியுடன் அந்த மாவட்டத்தில் உள்ள  மருத்துவமையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்க்குதலில் அவன் ஈடுபட்டவன் எந்தவித  தடயமும் விட்டுவிட்டு செல்லவில்லை. வாலிபரின் இந்த ஊசி தாக்குதலால் பெண்கள் பீதி அடைந்து உள்ளனர்.  'எயிட்ஸ்' போன்ற கொடிய விஷகிருமி  கொண்ட ஊசியால் தாங்கள் தாக்கப் படுவதாக அவர்கள் கருதிய தால் போலீசில் புகார் செய்தனர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்டவன் யார் எனறு காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு  வருகின்றனர்,  பாலா வெங்கட லட்சுமி, கனக மஹாலட்சுமி , பார்வதி,  சிந்து , நாகாகுமாரி மற்றும் எம் சரோஜினி ஆகியோர்  தாங்கள் ஊசி சைக்கோ மூலம்  தாக்கப்பட்டதாக கூறினார். நான் பேருந்து நிறுத்ததிற்கு செல்லும் வழியில் ஒருவன்  பைக்கில் தொப்பி அணிந்து வேகமாக சென்றான். அவன்  என்னுடைய பின்புறம் ஏதோ குத்திவிட்டு சென்றது போல்  நான் உணர்ந்தேன், நான் அந்த ஊசியை பார்த்த போது  தான் அது ஊசி சைக்கோ என்பதை நம்பினேன் என பாலா  வெங்கட லட்சுமி கூறினார்.

பாதிக்கப்பட ஆறு பெண்களும் பீமாவரம் அரசு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகள் விஜயவாடாவில்  தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.அதில் வாலிபர் விஷ ஊசியால்  தாக்காமல் தையல் ஊசியால்தான் தாக்கி இருக்கிறான் என தெரிய வந்து உள்ளது.


இதனிடையே ஊசி சைக்கோ வாலிபரை பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் ஆந்திர மாநில டி.ஜி.பி. தாகூர் அறிவித்து உள்ளார்.