1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 24 ஜனவரி 2017 (15:43 IST)

வேற்றுக்கிரகவாசி போல பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட மறுத்த தாய் [வீடியோ]

பீஹார் மாநிலத்தின் அரசு மருத்துவமனை ஒன்றில் விநோதக் குழந்தை பிறந்ததை அடுத்து, அக்குழந்தைக்கு அவரது தாய்ப்பால் கொடுக்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

பீஹார் மாநிலத்தின் பாட்னா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 28 வயது பெண் ஒருவருக்கு பெண் குழந்தைப் பிறந்துள்ளது. ஆனால், அந்த குழந்தை சத்துக்குறைபாடு காரணமாக விநோதமாகக் காணப்பட்டது.

இதனால், அந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்ட, அவரது தாய் மறுப்புத் தெரிவித்துள்ளார். இந்த தகவல் ஒரு மணி நேர்த்திற்குள் அப்பகுதிகளில் பரவ ஆரம்பித்தது. இதனையடுத்து, தாயையும், குழந்தையையும் காண்பதற்கு அப்பகுதி மக்கள் வெகுவாக திரண்டு வந்தனர். பின்னர், அவர்கள் மருத்துவமனை நிர்வாகம் தலையிட்டு வெளியேற்றியது.

இது குறித்து அக்குழந்தையின் தாயார் கூறுகையில், ”இது எப்படி நிகழ்ந்தது என்று எனக்கு எதுவும் தெரியவில்லை. இது, எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் முற்றிலுமாக பேரிழப்பாகும். ஒரு தாயாக அந்த குழந்தையை பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது” என்று கூறியுள்ளார்.

வீடியோ கீழே: