திருப்பதி கோவிலில் 2017ஆம் ஆண்டில் ரூ.1000 கோடி வருமானம்?

Last Modified சனி, 6 ஜனவரி 2018 (07:00 IST)
உலகில் உள்ள பணக்கார கோவில்களில் திருப்பதியும் ஒன்று. தினமும் குவியும் ஆயிரக்கணக்கான பக்தர்களால் சேகரிக்கப்படும் உண்டியல் பணம் மட்டுமே தினமும் கோடியில்தான் உள்ளது. அதுமட்டுமின்றி திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு பலவிதங்களில் வருமானம் கொட்டுகிறது

இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டில் மட்டும் சுமார் ரூ.1000 கோடி வருமானம் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டு உண்டியல் வருமானம் மட்டுமே 995.89 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் லட்டு விற்பனை, காணிக்கை செய்யப்படும் முடி விற்பனை ஆகியவகளை கணக்கில் சேர்த்தால் திருப்பதி கோவிலின் வருமானம் ரூ.1000 கோடியை தாண்டுகிறது.

இருப்பினும் கடந்த 2016-ம் ஆண்டில் வசூலான உண்டியல் தொகையை விட 2017ஆம் ஆண்டு உண்டியல் தொகை ரூ.50 கோடி குறைவு என்றும், இதற்கு பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :