1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2021 (22:48 IST)

முப்படையில் 9,118 பெண்கள்: பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல்!

முப்படையில் 9,118 பெண்கள்: பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல்!
இந்திய ராணுவத்தின் முப்படைகள் மொத்தம் 9 ஆயிரத்து 118 பெண்கள் பணிபுரிந்து வருவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது 
 
இந்திய ராணுவத்தின் காலாட்படை கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் பெண்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களாக அதிகரித்துக்கொண்டே வந்தது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்தியாவின் முப்படைகள் இதுவரை 9 ஆயிரத்து 118 பெண்கள் பணியாற்றுவதாக பாதுகாத்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ராணுவத்தில் புதிதாக ஆயிரத்து 600 பெண்களுக்கு பணி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
 
இராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக வந்திருக்கும் தகவல் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது