இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியது: லாக்டவுன் நீடிக்குமா?
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12.39 லட்சத்தை கடந்துள்ளதால் வரும் 31ஆம் தேதியுடன் முடிவடையும் லாக்டவுன் நீடிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12,39,684 என உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா தொற்றுடன் 4.25 லட்சம் பேர் சிகிச்சை பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தியாவில் 7.84 லட்சம் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர் என்பதும், இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 29,890 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 45,601 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 31874 பேர் மீண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினமும் 40ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால் நாடு முழுவதும் லாக்டவுன் நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதுகுறித்து மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது