வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 23 மே 2023 (07:52 IST)

ஜொமைட்டோவில் குவிந்து வரும் ரூ.2000 நோட்டுக்கள்: திணறும் நிர்வாகம்..!

இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறுவதாக அறிவித்த நிலையில் இன்று முதல் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இதுவரை உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஜொமைட்டோவில் ஆன்லைன் மூலமே பணம் செலுத்திக் கொண்டிருந்த பலர் 2000 ரூபாய் நோட்டுகளை கேஷ் ஆன் டெலிவரி மூலம் தந்து கொண்டிருப்பதாகவும் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஜொமைட்டோவில்  லட்சக்கணக்கில் 2000 ரூபாய் நோட்டுகள் குவிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
கேஷ் ஆன் டெலிவரி என்ற ஆப்சனையே பலர் பயன்படுத்தாத  நிலையில் தற்போது 90% பேர் அந்த ஆப்ஷனை தான் பயன்படுத்துகிறார்கள் என்றும் இதனால் அந்த நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு சிக்கல் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
ஜொமேட்டோ, ஸ்விக்கி மட்டுமின்றி ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் பலர் கேஷ் ஆன் டெலிவரி மூலம் 2000 ரூபாய் நோட்டுக்களை தான் தந்து கொண்டிருப்பதாக கூறப்படுவதால் பதுக்கல்காரர்களிடம் இருந்து 2000 ரூபாய் நோட்டு வெளியே வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது..
 
Edited by Siva