வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 11 நவம்பர் 2016 (12:57 IST)

கறுப்புப் பணத்தை முட்டாள்கள் தான் பதுக்கி வைப்பார்கள்: மோடி மீது அமைச்சர் தாக்கு

கறுப்புப் பணத்தை யாரும் நோட்டுக்களாகப் பதுக்கிவைப்பதில்லை. முழு முட்டாள்கள்தான் அப்படிச் செய்வார்கள் கேரளா நிதியமைச்சர் டி.எம்.தாமஸ் ஐசக் கூறியுள்ளார்.


 

இது குறித்து கூறியுள்ள தாமஸ் ஐசக், “இரவில் அறிவித்த இந்த முடிவு மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பெரிய நாடுகள் பலவும் கரன்சிகளை மாற்றியுள்ளன. என்ற போதிலும் அந்நாடுகள் அதை திடீரென ஒரே நாளில் செய்யவில்லை.

இந்த அறிவிப்பு இந்தியப் பொருளாதார அமைப்பைச் செயலற்று முடக்கிப்போட்டுள்ளது. எவ்வாறு அரசுக் கருவூலங்கள் செயல்படும் என்பதற்குத் தெளிவில்லை. கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கே இந்த முடிவு என்பது சரியல்ல.

கறுப்புப் பணத்தை யாரும் நோட்டுக்களாகப் பதுக்கிவைப்பதில்லை. முழு முட்டாள்கள்தான் அப்படிச் செய்வார்கள். கறுப்புப் பணம் அந்நிய நாடுகளில் முதலீடு செய்வதன் மூலமும் மற்றும் பொருட்களின் மூலமாகவும் பதுக்கிவைக்கப்படுகிறது.

ஆனால், மத்திய அரசின் இந்த முடிவு கள்ளநோட்டுக்களைத் தடுப்பதற்கே பயன்படும். இந்த முடிவு பொருளாதார அமைப்பைச் சீர்குலைக்கும். பொருளாதார நிபுணர்களோடு இது குறித்து நான் விவாதித்தபோது மத்திய அரசின் இந்த முடிவு அறிவற்ற செயல் என்ற பதிலே கிடைத்தது” என்று கூறியுள்ளார்.