செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 14 மார்ச் 2018 (14:33 IST)

60% கணக்குகள் போலி; அதிர்ச்சியளிக்கும் மோடி பாளோயர்ஸ்

பிரதமர் நரேந்திர மோடியை டுவிட்டரில் பின் தொடர்பவர்களில் 60% போலி முகவரி என்பது தெரியவந்துள்ளது.

 
சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களின் டிஜிட்டல் வியூகத்தை மேம்படுத்த உதவும் டிஜிட்டல் தளமான டுவிப்ளோமேசி அரசியல் தலைவர்களில் பிரபலமானவர்கள் டுவிட்டர் பக்கத்தை பின் தொடர்பவர்கள் அதிகம் போலி முகவரி கொண்ட கணக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.
 
அதில் இந்திய பிரதமர் மோடியை டுவிட்டரில் பின் தொடர்பவர்களில் 60% பேர் போலி முகவரி என்று தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்-ஐ டுவிட்டரரில் பின் தொடர்பவர்களில் 30% பேர் என்பது தெரியவந்துள்ளது.
 
உலக அரசியல் தலைவர்கள் ஒபாமா, டிரம்ப் ஆகியோரை போன்று அதிக அளவில் பின்தொடர்பவர்களை கொண்ட அரசியல் தலைவராக மோடி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்காக இவர் பலரிடம் பாராட்டும் பெற்றார். இந்நிலையில் டுவிப்ளோமேசி தெரிவித்துள்ளது அதிர்ச்சியளித்துள்ளது.