மக்கள் மத்தியிலும் மக்களவையிலும் நம்பிக்கை உள்ளது. ஓட்டெடுப்புக்கு பின் மோடி டுவீட்
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு எதிராக நேற்று எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. அரசுக்கு எதிராக வெறும் 126 வாக்குகள் மட்டுமே பதிவானது. மோடி அரசுக்கு ஆதரவாக 325 எம்பிக்கள் வாக்களித்தனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றவுடன் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியபோது, 'இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் எங்களுக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி. இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்தும் மற்றும் நமது இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றும் எங்களின் முயற்சிகள் தொடரும். ஜெயஹிந்த்!,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இன்னொரு டுவீட்டில், 'தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களவையிலும் நம்பிக்கை உள்ளது. 125 கோடி இந்திய மக்கள் மத்தியிலும் நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.
பொதுவாக மத்திய அரசு மீது மக்களுக்கு ஓரளவு அதிருப்தி இருந்த நிலையில் தற்போது எதிர்க்கட்சிகளே மீண்டும் அரசு மீது நம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.