புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 24 மே 2019 (07:45 IST)

26ஆம் தேதி ஜனாதிபதியை சந்திக்கும் மோடி! அன்றே பதவியேற்பா?

17வது மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டுமின்றி தனிப்பெரும்பான்மையுடன் கூட்டணி கட்சிகளின் ஆதரவு இன்றியே ஆட்சி அமைக்கும் அளவுக்கு வலுவாக உள்ளது. 
 
இந்த நிலையில் புதிய ஆட்சியமைக்க உரிமை கோரி மே 26 ஆம் தேதி பிரதமர் மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களை சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
மே 26ஆம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் மோடி, அன்று மாலையே தனது அமைச்சர்களுடன் பிரதமர் பதவியை ஏற்பார் என்றுகூறப்படுகிறது. மேலும் அமைச்சரவை பட்டியலில் சிறு மாறுதல் இருக்கும் என்றும், அமைச்சரவையில் சில புதிய முகங்கள் இணைய வாய்ப்பு உள்ளதாகவும், அமைச்சர்கள் பட்டியலை மோடி, அமித்ஷா தீவிரமாக தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது