1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 13 ஜூன் 2019 (12:28 IST)

அனுமதி கிடைத்தும், பாக். வான்வெளி பயணத்தை புறக்கணித்தார் மோடி!

கிர்கிஸ்தான் நாட்டில் ஷாங்காய் மாநாடு இன்று நடைபெறவிருக்கும் நிலையில், பிரதமர் மோடி பாகிஸ்தான் வான்வெளியை புறக்கணித்து பறந்து சென்றார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம்  நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் விமானம், கிர்கிஸ்தான் ஷாங்காய் மாநாட்டிற்கு பாகிஸ்தான் வான்வெளி வழியே செல்வதற்காக, பாகிஸ்தான் அரசிடம் இந்திய அரசு அனுமதி கோரியது.

பாகிஸ்தான் அரசு அந்த கோரிக்கையை ஏற்றுகொண்ட நிலையில், இன்று ஷாங்காய் மாநாட்டிற்கு பிரதமர் மோடி, பாகிஸ்தான் வழியே தனது விமானத்தில் பறக்க புறக்கணித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரதமர் மோடியின் விமானம் ஈரான், மத்திய ஆசிய நாடுகள் வழியாக கிர்கிஸ்தான் நாட்டைச் சென்றடையும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.