Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டிஜிட்டல் இந்தியா: மோடியின் அடுத்த வியூகம்!!


Sugapriya Prakash| Last Modified திங்கள், 2 ஜனவரி 2017 (10:31 IST)
பிரதமர் மோடி ஆதார் அட்டை மூலம் பண பரிவர்த்தனை செய்யக்கூடிய மொபைல் பண பரிவர்த்தனை செயலியை வெளியிட்டுள்ளார். 

 
 
மோடி வெளியிட்டுள்ள இந்தச் செயலி பிஎச்ஐஎம் ( BHIM Bharat Interface for Money) எனப் பெயரிடப்பட்டுள்ளது. யூபிஐ ( UPI unified payment interface) மற்றும் யுஎஸ்எஸ்டி போன்ற செயலிகளின் மறு பதிப்பே  பிஎச்ஐஎம் ஆகும். 
 
மொபைல் போன் வழியாக வேகமாக, பாதுகாப்பான, நம்பகமான, பணமில்லா பரிவர்த்தனை செய்ய  பிஎச்ஐஎம் (BHIM) உதவுகின்றது. இதை பயன்படுத்த இணைய வசதி தேவையில்லை. இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட செயலியாகும்.
 
பண மதிப்பிழப்பிற்கு பிறகு மோடி ரொக்கமில்லா பண பரிவர்த்தணையை ஊக்குவித்து வருகிறார். இது டிஜிட்டல் இந்தியாவின் ஒரு அங்கமாக பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :