1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2019 (13:43 IST)

யாராவது காஷ்மீர் போகணும்னா சொல்லுங்க ஏற்பாடு பண்ணி தறேன்! – பிரதமர் மோடி

மாகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க மாகாராஷ்டிரம் சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு பல பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று பார்லி பகுதியில் பொதுக்கூட்டத்தில் மக்களிடையே பேசினார் மோடி. அப்போது காஷ்மீரில் இந்துக்கள் அதிகம் இருந்திருந்தால் பாஜக சிறப்பு பிரிவை ரத்து செய்திருக்காது என காங்கிரஸார் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.

அவர் பேசும்போது “காஷ்மீரை இந்தியாவுடன் நிரந்தரமாக இந்தியாவின் ஒரு பகுதி ஆக்குவதற்காகவே சிறப்பு பிரிவுகள் ரத்து செய்யப்பட்டன. இதில் இந்து – இஸ்லாம் என எந்த பாரபட்சமும் பார்க்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியின்போது காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தால் காஷ்மீரை இழந்துவிடுவோம் என கூறினார்கள்.

இப்போது என்ன நாம் காஷ்மீரை இழந்துவிட்டோமா? இப்போது யார் வேண்டுமானாலும் காஷ்மீர் சென்று வரலாம். யாருக்காவது காஷ்மீர் செல்ல விருப்பம் இருந்தால் சொல்லுங்கள். நான் ஏற்பாடு செய்து தருகிறேன்” என பேசியுள்ளார்.