1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 3 நவம்பர் 2018 (10:42 IST)

59 நிமிடத்தில் லோன் வாங்கலாம் –மோடியின் புதிய திட்டம்!

சிறு மற்றும் நடுத்தர நிறுவங்கள் தங்களுக்குத் தேவையான கடனை தேவையான சான்றுகளோடு விண்ணப்பித்து 59 நிமிடங்களில் பெற்றுக்கொள்ளலாம் என இந்தியப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி போன்ற அதிரடி திட்டங்களால் நாட்டின் பொருளாதாரம் பலமாக அடிவாங்கியுள்ளது. இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் சிறு மற்றும் நடுத்தர தொழில் செய்யும் நிறுவனங்கள் மத்திய அரசின் மீது மோடி மீதும் கடும் அதிருப்தியில் உள்ளன.

இன்னும் 6 மாதத்தில் தேர்தல் நடைபெற இருப்பதால் மோடி அரசு இப்போது பல திட்டங்களை அறிவித்து வருகிறது. அதில் ஒன்றாக நலிந்து வரும் சிறு நிறுவனங்களைக் காப்பாற்றும் பொருட்டு அவைகளுக்கு எளிதாகக் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்படி தக்க சான்றுகளுடன் விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு 59 நிமிடத்தில் கடன் வழங்கப்படும் என மோடி அறிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் பங்கேற்ற அவர் கூறியது ‘இந்த திட்டத்தின் படி ஜிஎஸ்டியின் கீழ் முறையாக ரிட்டன் தாக்கல் செய்துள்ள அனைத்து நிறுவனங்களும் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த கடனுக்கு வட்டியில் இருந்து 2 விழுக்காடு தள்ளுபடியும் உண்டு. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 72000 நிறுவனங்கள் பயன்பெறும். இத்திட்டத்தின் மூலம் வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் உயரும். இதில் விண்ணப்பிக்கும் தகுதியானவர்களுக்கு 59 நிமிடத்தில் கடன் வழங்கப்படும்; என அறிவித்துள்ளார்.