1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

மோடி-ஜோபைடன் சந்திப்பு: முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்!

joe biden
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனை வரும் 24ஆம் தேதி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் இந்த சந்திப்பில் முக்கிய விஷயங்கள் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
அடுத்த வாரம் டோக்கியோவில் குவாட் நாடுகள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.
 
 இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் கலந்து கொள்ள இருப்பதை அடுத்து ஜோபைடன் - மோடி  சந்திப்பு நடைபெறும் என்றும், இந்த சந்திப்பின் போது உக்ரைன் போர் உள்பட பல முக்கிய விஷயங்கள் குறித்தும் இருநாட்டு தலைவர்களும் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .
 
அமெரிக்க அதிபர் மட்டுமின்றி ஜப்பான் பிரதமர் உட்பட மேலும் சில தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.