வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 30 ஏப்ரல் 2018 (12:01 IST)

சர்ச்சை பேச்சு: திரிபுரா முதல்வருக்கு மோடி அவரச அழைப்பு...

திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப்க்கு பிரதமர் மோடி அவசர அழைப்பு விடுத்துள்ளார். மோடி மற்றும் அமித்ஷா இணைந்து இவரது சர்ச்சை பேச்சுக்கு முடிவு கட்டுவார்கள் என தெரிகிறது.
 
திரிபுரா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து வரலாற்று சாதனை படைத்தது பாஜக. இதைத்தொடர்ந்து திரிபுரா மாநில முதல்வராக பிப்லாப் குமார் தேப் பதவியேற்றார்.
 
இந்நிலையில், இவர் சமீபகாலமாக சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். மகாபாராத காலத்திலேயே, இன்டர்நெட், செயற்கைகோள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அதன் பின்னர், ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகி பட்டம் கொடுத்ததில் நியாயம் இருக்கிறது. ஆனால் டயானா ஹெய்டனுக்கு உலக அழகி பட்டம் ஏன் கொடுத்தார்கள் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். 
 
இவை அனைத்திற்கும் மேல், படித்த இளைஞர்கள் வேலை தேடி அரசியல்வாதிகள் பின்னால் செல்லாமல், பீடா கடை வைத்து பிழைக்கலாம் அல்லது மாடு மேய்க்கலாம் என தெரிவித்தார்.
 
இவ்வாறு திரிபுரா முதல்வர் எல்லை மீறி பேசி வருவதால், மே 2 ஆம் தேதி பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் சந்திக்கும்படி மேலிடத்தில் இருந்து அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.