திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2020 (19:58 IST)

கொரோனாவால் பாதித்தவரின் பகுதியை சுத்தம் செய்த எம்.எல்.ஏ ரோஜா !

சீனாவில் இருந்து பலவேறு உலகநாடுகளுக்குப் பரவிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தீவிரமாக பரவிவருகிறது.

இந்நிலையில், வரும் மே 3 ஆம் தேதிவரை  நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் நகரி தொகுதிக்குட்பட்ட வடமாலை என்ற பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவரது குடியிறுப்பு பகுடியில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய அரசு முடிவு செய்தது.

ஆனால், அங்குள்ள தூய்மைப் பணியாளர்கள்  கிருமி நாசினி கொண்டு அப்பகுதியை சுத்தம் செய்ய தயக்கம் காட்டினர்.

இதையடுத்து, எம்.எல்.ஏ ரோஜாவின் கவனத்திற்கு இந்த விசயம் கொண்டு செல்லப்பட்டது. பின், அவர் தானே அப்பகுதிக்குச் சென்று கிருமி நாசினி தெளித்தார். அதன்பிறகுதான் பணியாளர்கள் அங்கு சுத்தம் செய்தனர். எம்.எல்.ஏ ரோஜாவின் இந்த நடவடிகைக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.