1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By

சட்டசபைக்குக் குதிரையில் வந்த பெண் எம் எல் ஏ!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ அம்பா பிரசாத் சட்டமன்றத்துக்கு வித்தியாசமான முறையில் வருகை தந்தார்.

நேற்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து ஜார்க்கண்ட் மாநில பார்காகோன் சட்டமன்றத் தொகுதி எம் எல் ஏ அம்பா பிரசாத், சட்டசபைக்கு குதிரையில் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த மாநிலத்திலேயே இளமையான சட்டமன்ற உறுப்பினர் அம்பா பிரசாத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு இந்த குதிரை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி, ரவி ரத்தோரால் பரிசாக அளிக்கப்பட்டது.