என்னையும் உருவக்கேலி செய்தார்கள்: மிஸ் யுனிவர்ஸ் ஹர்னாஸ் சந்து உருக்கம்!
என்னையும் உருவக்கேலி செய்தார்கள்: மிஸ் யுனிவர்ஸ் ஹர்னாஸ் சந்து உருக்கம்!
கடந்த 2000ம் ஆண்டு இந்திய அழகி லாரா மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற நிலையில் அதன் பிறகு 21 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டுதான் இந்திய அழகி ஹர்னாஸ் சந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து அவருக்கு இந்தியா முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஹர்னாஸ் சிறுவயதில் தான் உருவக்கேலி போன்ற சவால்களை எதிர் கொண்டதாக தெரிவித்துள்ளார்
ஆனால் அந்த உருவக்கேலி தான் என்னுடைய வாழ்க்கையை மாற்றியது என்பதும் வாழ்க்கை என்றால் என்ன என்பதைப் பற்றிய எனது பார்வை மாறியது என்றும் அவர் தெரிவித்துள்ளார் உருவ அமைப்பை விட நாம் தனித்துவமானவர்கள் என்ற எண்ணமே பெண்களை அழகாக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அவருடைய இந்த கருத்து பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது