செல்போனில் லேண்ட்லைன் ரிசீவர்: மத்திய அமைச்சரின் புதிய டெக்னிக்
செல்போன்கள் அதிகம் பயன்படுத்துவதால் கதிர்வீச்சு காரணமாக உடல்நிலையில் அதிக பாதிப்பு ஏற்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். குறிப்பாக செல்போனை அதிக நேரம் பயன்படுத்தும்போது அதன் கதிர்வீச்சு காது வழியாக மூளைக்கு சென்று பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுவதுண்டு
இந்த நிலையில் செல்போனுடன் லேண்ட்லைன் ரிசீவர் இணைத்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பயன்படுத்தி கதிர்வீச்சில் இருந்து தப்பிக்கலாம் என்று கூறிவருவதோடு அதனை செய்தியாளர்கள் முன் அதை செய்தும் காட்டினார்
செல்போன் கதிர்வீச்சு தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளவே லேண்ட்லைன் ரிசீவரை செல்போனுடன் இணைத்து பயன்படுத்துவதாக, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பொதுமக்களும் இதுமாதிரி பயன்படுத்துவதால் கதிர்வீச்சு தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என்று கூறினார். அமைச்சரின் இந்த புதிய டெக்னிக் மக்களை எந்த அளவுக்கு சென்றடையும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்