வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 24 ஜனவரி 2020 (07:29 IST)

ஏர் இந்தியா நிறுவனத்தை நானே வாங்கியிருப்பேன், ஆனால்... மத்திய அமைச்சர்

நான் மத்திய அமைச்சராக இல்லாமல் இருந்திருந்தால் நானே ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்குவதற்கான ஏலத்தில் கலந்திருப்பேன் என்று மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார்.
 
சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் என்ற நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ்கோயல் பேசியபோது, ‘பல ஆயிரம் கோடி ரூபாய் கடனில் மூழ்கியுள்ள ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு விற்பனை செய்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
 
இதற்கு பதிலளித்த பியூஷ்கோயல் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை உலகின் பல்வேறு நாடுகளிள் உள்ள நிறுவனங்கள் ஒரு தங்கச் சுரங்கம் போன்று பார்க்கின்றன. எனவே சிறாந்த நிர்வாகம் இருந்தால் ஏர் இந்தியா நிறுவனத்தை நல்ல லாபகரமாக நடத்தலாம். நான் மத்திய அமைச்சர் இல்லை என்றால் நானே ஏர் இந்தியாவை வாங்கியிருப்பேன் என்று கூறியுள்ளார்.
 
மத்திய அமைச்சரின் இந்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது