1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (11:40 IST)

எல்ஐசி பொதுப்பங்கு வெளியீடு விரைவில் நடைபெறும்: பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன்

எல்ஐசி பொதுப்பங்கு வெளியீடு விரைவில் நடைபெறும்: பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன்
எல்ஐசி பொதுபங்குகள் விரைவில் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
 
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2022 - 23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் வாசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கும் நிலையில் அனைவரும் எதிர்பார்த்த எல்ஐசி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது 
 
விரைவில் எல்ஐசியின் பங்குகள் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள எதிர்ப்புகளும் ஆதரவுகளும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் வெளியிட்டால் எல்ஐசி நிறுவனத்திற்கு நஷ்டம் என்று ஒரு சிலரும் எல்ஐசி முதலீட்டாளர்களுக்கு லாபம் என்று ஒரு சிலரும் கூறி வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது
 
 ஏற்கனவே ஏர் இந்தியா தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டு விட்ட நிலையில் தற்போது எல்ஐசியின் பங்குகள் வெளியிடப்படும் என கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது