1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 5 அக்டோபர் 2023 (19:04 IST)

வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் ஏன்? விளக்கம் அளித்த மத்திய அமைச்சர்.

நாடு முழுவதும் தற்போது 34 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் அடிக்கப்பட்டதற்கு அரசியல் காரணம் கிடையாது என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மேலும் கூறியபோது, ‘மனிதர்களின் கண்களுக்கு இரண்டு நிறங்கள் மட்டும்தான் நீண்ட தூரத்தில் இருந்தால் கூட தெரியும். ஒன்று காவி, இன்னொன்று மஞ்சள். ஐரோப்பா நாடுகளில் 80 சதவிகித ரயில்கள் இந்த இரண்டு நிறங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
 
கண்களுக்கு எளிதில் தெரியும் என்பதால் தான், விமானம் மற்றும் கப்பல்களின் கருப்புப் பெட்டிகள் காவி நிறத்தில் உள்ளன. மீட்புப் படகுகள் மற்றும் உயிர் காக்கும் ஆடைகளும் காவி நிறத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. எனவே வந்தே பாரத் ரயில்களுக்கு காவி நிறம் அடிக்கப்பட்டதில் எந்த அரசியலும் இல்லை. 100 சதவிகிதம் அறிவியலின் அடிப்படையில் தான் காவி நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
 
Edited by Siva