வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 17 மார்ச் 2016 (15:21 IST)

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பாலில் 68 சதவீதம் கலப்படம் : அதிர்ச்சி தகவல்

இந்திய மக்கள் பயன்படுத்தும் பாலில் 68 சதவீதம் தரமற்ற கலப்படம் என தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.


 

 
மக்களவையில் நேற்று பேசிய ஹரிஷவர்தன்  “இதற்கு முன்பு, பாலில் உள்ள கலப்பட பொருட்களை கண்டுபிடிக்க, தனித்தனி வேதியல் பரிசோதனைகளை செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இப்போது ஒரே சோதனையில் பாலில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து கலப்படங்களையும் கண்டறிய முடியும். எம்பிக்கள் இந்த கருவையை வாங்குவதற்கு உதவ வேண்டும்.
 
மேலும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர சான்று நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் பாலில் 68 சதவீதம் தரமற்றவை என தெரிய வந்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறியிருக்கிறார்.